அன்னதானம்

கோயில்கள், மடங்கள் போன்ற இடங்களின் ஆகப் பெரிய பயனாக நான் கருதுவது, அன்னதானம். தமிழ்நாட்டு அரசு பொறுப்பேற்று, அறநிலையத்துறையின் மேற்பார்வையில் இயங்கும் கோயில்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ததற்கு முன்பிருந்தே அவ்வறப்பணி பல கோயில்களில் நடந்து வந்தன. தினமும் இல்லாவிட்டாலும் விசேட தினங்களில் அன்னதானம் இருக்கும். பசித்திருப்பவர்கள் எங்கெங்கிருந்தோ வந்து உணவருந்திப் புதிதாகப் பிறந்து செல்வதைக் காண அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். கோடம்பாக்கத்தில் நான் இருக்கும் பகுதியில் ஒரு மடம் உண்டு. சாமியார் மடம் என்பார்கள். ஒரு … Continue reading அன்னதானம்